இரு மாணவர்களுக்கு இடையில் மோதல் – ஒருவர் பலி

ஹம்பாந்தோட்டை சிப்பிக்குளம பிரதேசத்தில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, பத்தேவெல பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் அதிகமாகி இந்த மோதல் மூண்டதுடன், தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Advertisement

சம்பவம் தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட மாணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.