இரண்டாவது T-20 போட்டி இன்று

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.

இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

Advertisement

இதேவேளை, இலங்கை அணிக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது இருபதுக்கு இருபது ஓவர் போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.