இன்று விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுப்பு

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, மத்தள, தனமல்வில, வெல்லவாய, உமா ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று (24) காலை 9:45 மணி முதல் 11 மணி வரை மூடப்படவுள்ளன.

அத்தோடு கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை இன்று (24) பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை மற்றும் இரவு 9:30 மணி முதல் இரவு 10:30 மணி வரை மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement