இன்று முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம்

2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒன்லைன் முறையூடாக விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரை இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.ஜூன் 14ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இணையவழி நுழைவு நிறுத்தப்படும் என்றும்இ விண்ணப்பங்களை ஏற்கும் இறுதி திகதி எக்காரணத்துக்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.