இன்று முதல் புதிய விசா முறை

சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரம் ‘இ-விசா’ முறை இன்று (17) முதல் அமுல்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் ஐந்து மொழிகளில் ‘இ-விசா’ விண்ணப்பிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

அத்துடன், 03 வாரங்களுக்குள் அனைத்து விசா விண்ணப்பங்களுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Advertisement