இன்று முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலை காப்புச் சட்டமூலம்

ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை (01) சான்றுரைப்படுத்தினார்.

இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச் சட்டமாக இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்த வந்த நிலையில் சபாநாயகர் இன்று கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement