இன்று தேசிய துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை முன்னிட்டு இன்று (21) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.