இன்று அதிகாலை நாட்டை உலுக்கிய விபத்து- மூவர் பலி..!! இருவர் காயம்..!!

ரம்பேவ – அனுராதபுரம் ஏ20 பிரதான வீதியின் 13ஆம் மற்றும் 14ஆம் மைல் கற்களுக்கு இடையே இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்வையிட சென்றவர்கள் மீது கெப் ரக வாகனமொன்று மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இதனையடுத்து குறித்த கெப் ரக வாகனத்துடன் அதன் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்தில் ரம்பேவ பகுதியைச் சேர்ந்த 19, 21 மற்றும் 15 வயதுடைய மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.