இன்னும் சில மாதங்களில் மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கும் மலையக திராவிட மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் பிரதிநிதிகளையும் ஒன்றிணைத்து வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த மாதத்தில் முன்வைக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் ‘இந்தியா-இலங்கை’ வீட்டுத்திட்டத்தின் நான்காம் கட்டத்தை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

Advertisement

பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களில் உள்ள 45 தோட்டங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 1300 வீடுகளுக்கான அடிக்கல்லைக் குறிக்கும் ஸ்தாபனத்தை இணையத்தளத்தின் ஊடாகத் திரைநீக்கம் செய்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீர் வழங்கல் அமைச்சர் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஜீவன் தொண்டமான் மற்றும் இலங்கை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களினால் செய்யப்பட்டது.