இந்த ஆண்டுக்கான முதல் சூரிய கிரகணம் இன்று

2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று தென்படவுள்ளது.

சுமார் 4 மணி நேரம் 9 நிமிடங்கள் இந்த சூரிய கிரகணம் நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஆகியவை ஏற்படுகின்றன. பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

Advertisement

இன்று இரவு 9:21 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 2:22 மணி வரையிலும் இந்த சூரிய கிரகணம் தென்படவுள்ளது.

இந்த சூரிய கிரகணம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென்னாபிரிக்கா நாடுகளில் முழுமையாக தென்படும். இதனால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேல் வானில் இருள் சூழும் என கூறப்படுகிறது.

கடந்த 1970ஆம் ஆண்டு இதே போன்ற முழுமையான சூரிய கிரகணம் தோன்றியது. இதன் பின்னர் வருகிற 2150ஆம் ஆண்டு தான் இத்தகைய முழு சூரிய கிரகணம் தோன்றும் என கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களால் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.