இந்திய வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தார் அனுர!

இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ராவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்றிரவு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம், இந்தியாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

Advertisement

இந்த சந்திப்பானது நேற்றைய தினம் சர்தார் பட்டேல் பவனில் நடைபெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் 5 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்த விஜயத்தின் போது, புது டில்லி, அஹமதாபாத் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு விஜயம் மேற்கொண்டு பல முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது