இந்தியா சென்றுள்ள அனுரகுமார திசாநாயக்க குஜராத் முதல்வரை சந்தித்தார்

இந்தியா சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் பட்டேலை (Bhupendrabhai Patel) இன்று சந்தித்துள்ளனர். 

குஜராத்தின் சட்டசபை கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் வறுமையை ஒழிப்பதற்கான அபிவிருத்தி மூலோபாய திட்டங்கள் மற்றும் பிராந்தியத்தின் நிர்வாக செயற்பாடுகள் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

Advertisement

அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் குஜராத்தின் கைத்தொழில் அமைச்சருடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். 

இந்திய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டுள்ள, குஜராத் மாதிரி திட்டத்தை இதன்போது முன்வைத்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வலுசக்தி மறுசீரமைப்பு, விவசாயம் மற்றும் நீர், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் முதலீடு, சுகாதார பாதுகாப்பு மற்றும் மகளிரை வலுப்படுத்துதல் ஆகியன குஜராத் மாதிரி திட்டத்தின் பிரதான அம்சங்களாகும். 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட குழுவினர் இந்தியாவின் உத்தியோகபூர்வ அழைப்பிற்கிணங்க இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.