இசை நிகழ்ச்சிக்காக ஜேர்மனி செல்லும் கில்மிஷா, அசானி; குவியும் பாராட்டுக்கள்

Zee தமிழின் சரிகமப லிட்டில் சம்பியன் இறுதியில் பங்கேற்ற கில்மிஷா,அசானி உள்ளிட்டவர்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.

குறித்த பயணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, Zee தமிழின் சரிகமப லிட்டில் சாம்பியனான கில்மிஷா, இறுதிப் போட்டியாளர்களான ருத்ரேஷ் குமார், சஞ்சனா, ரிக்ஷிதா, கனிஷ்கர் மற்றும் பார்வையாளர்கள் தேர்வான அசானி ஆகியோர் ஜேர்மனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும் இந் நிகழ்ச்சி ஏப்ரல் 20 ஜேர்மனியில் – EHS EVENTHALLE SCHWELM எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

Advertisement

இத்தகவலை கில்மிஷா தனது முகநூலில் பகிர்ந்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இருவருக்கும் பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.