ஆசனவாயிலில் காற்று நிரப்பும் குழாயை சொருகிய நண்பர்கள்

மாபிம பகுதியில் உள்ள தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயிலில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25 ஆம் திகதி இந்த இளைஞனின் ஆசனவாயிலில் குறித்த நிறுவன ஊழியர்கள் இருவர் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை சொருகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன்போது, ​​வயிற்றில் காற்று பரவி ஆபத்தான நிலையில் இளைஞன் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) இரவு உயிரிழந்துள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஊழியர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.