அஸ்வெசும கிடைக்காதவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் மேலும் 300,000 குடும்பங்களை இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Advertisement

இதுவரை கிடைத்துள்ள 604,000 அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.