அழுகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்பு

ஒக்கம்பிட்டிய பிரதேசத்தில் அழுகிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புத்தல – ஒக்கம்பிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட மாளிகாவில களுகல்கட்டான பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த நபரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒக்கம்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.