அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல்

அரச ஊழியரின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்று முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள 10,000 ரூபாவுடன் நிறுவனங்களுக்குப் பணத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்காக 107 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதுடன், அதிகரிக்கப்பட்ட தொகை மாத்திரம் 13 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளது.

Advertisement