அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயம் செய்யவுள்ள நாமல்!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அயோத்தி ராமர் கோயிலுக்கு விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

புதுடெல்லிக்கு 02 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் அயோத்தி ராமர் கோயிலுக்கு முன்னெடுக்கவுள்ளார்.

இந்தநிலையில், எதிர்வரும் 09ம் திகதி மாலை அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

அத்துடன், புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பல்வேறு உயரதிகாரிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதும் வகையில் அமையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.