அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் இன்று (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையின் திறந்தவெளி சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த இரு கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்களில் ஒருவர் அனுராதபுரம் ஷ்ரவஸ்திபுர பிரதேசத்தில் வசிப்பதாகவும், மற்றைய கைதி களனி பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் அனுராதபுரம் சிறைச்சாலை தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த கைதிகள் சிறைச்சாலை ஆடைகளை கழற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகளும் பொலிஸாரும் இந்த கைதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.