அனுமதியின்றி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு கால அவகாசம்

விசா காலத்தை மீறி குவைட்டில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி,பொதுமன்னிப்புக் காலத்தில், குவைட்டில் தங்கியிருக்கும் மற்றும் பணியிடங்களை விட்டு வெளியேறிய இலங்கையர்கள், அபராதம் அல்லது சட்டத் தடைகள் எதுவும் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பைப் பெற முடியும்.

இந்த பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 17 ஆம் வரை அமுலில் இருக்கும் என குவைட்டுக்கான இலங்கை தூதுவர் காந்தீபன் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த பொது மன்னிப்புக் காலத்திற்குப் பிறகு இலங்கைக்கு வர வேண்டியிருந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கைரேகைப் பதிவு செய்யப்பட்டு, 650,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, மீண்டும் குவைத்துக்குள் நுழைய முடியாத வகையில் நாடு கடத்தப்படுவார்கள்.