அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் சிறுவன் பலி

மகாராஷ்டிரா புனேவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனின் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார்.

தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது குறித்த சிறுவன் இந்த துரதிஷ்ட சம்பவத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

ஷௌர்யா என்ற குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் பந்தை எதிர்கொண்ட சிறுவன் அதனை நேரடியாக சிறுவனை நோக்கி அடித்துள்ளார்.

Advertisement

இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.