உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு உதவிய ஈரானுக்கு நன்றி



உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் வெற்றிக்காக ஈரான் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஈரானின் உதவியின்றி இலங்கையினால் உமா ஓயாவில் இருந்து கிரிந்தி ஓயாவிற்கு நீரை கொண்டு செல்ல முடியாது என இன்று நடைபெற்ற உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்ட திறப்பு விழா நிகழ்வில் தெரிவித்தார்.

உலகளாவிய தெற்கு நாடுகள் தமது அடையாளத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட விரும்புவதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, அதற்காக உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு உதவிய ஈரானுக்கு நன்றி உமா  ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்கு உதவிய ஈரானுக்கு நன்றி Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் ; சற்றுமுன் சஜித் அறிவிப்பு



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் ; சற்றுமுன் சஜித் அறிவிப்பு  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் ; சற்றுமுன் சஜித் அறிவிப்பு Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

மன்னாரை போர்ட் சிட்டியாக மாற்றும் ஜனாதிபதியின் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ; மனுஷ



ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம்  இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.


மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள். 2015 ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.


"குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி விநியோகம் நாடு தழுவிய ரீதியில்  நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இலக்கு காலவரையின்றி மானியங்களை நம்பியிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, குடும்பங்களை மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளார்" என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


மன்னாரின் அபிவிருத்தி தொடர்பில், மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெறுவதற்கும் ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் அதிகமாக மன்னார் மாவட்டத்தில்  சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.


வட மாகாணத்தின் போருக்குப் பின்னரான போராட்டங்களை அங்கீகரித்த அமைச்சர், முன்னேற்றத்திற்கான அடித்தளக் கூறுகளாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, நாடு முழுவதும் சமத்துவமான அபிவிருத்திக்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார் என தெரிவித்தார்.

மன்னாரை போர்ட் சிட்டியாக மாற்றும் ஜனாதிபதியின் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ; மனுஷ மன்னாரை போர்ட் சிட்டியாக மாற்றும்  ஜனாதிபதியின் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ; மனுஷ Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

2015 முதல் 2022 வரை நாட்டுக்குள் பல்வேறு விதமான சட்டவிரோத முறைகளில் வாகனங்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளன - அவற்றை பாவிப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்போகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்




சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 700 கோடி மதிப்பிலான 112 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



வாகனங்களை கொள்வனவு செய்யும் போது அவதானமாக இருக்குமாறு அமைச்சர் சியம்பலாபிட்டிய பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்.



சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 112 வாகனங்கள் மோசடி மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்



அவற்றின் பெறுமதி 700 கோடி ரூபாவை தாண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார். 2015ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இந்த வாகனங்கள் பல்வேறு சட்டவிரோதமான முறைகள் மூலம் இலங்கைக்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.



இந்த வாகனங்களை தற்போது பயன்படுத்துபவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட உள்ளது.



உரிய முறைகளின் ஊடாக வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது வாகனங்கள் கொள்வனவு செய்யும் தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
2015 முதல் 2022 வரை நாட்டுக்குள் பல்வேறு விதமான சட்டவிரோத முறைகளில் வாகனங்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளன - அவற்றை பாவிப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்போகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் 2015 முதல் 2022 வரை நாட்டுக்குள் பல்வேறு விதமான சட்டவிரோத முறைகளில் வாகனங்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளன - அவற்றை பாவிப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்போகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர் Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

#இலங்கை #VIDEO > உயிரிழந்த தன் தந்தைக்காக கோடிகளை கொட்டி தாஜ்மஹால் மற்றும் ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற வடிவில் நினைவாலயம் கட்டிய மகன்



யாழில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார்.

கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.


இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.


அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.


இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்று முழுவதுமாக யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.


தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.


அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில், தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை நல்வழிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

#இலங்கை #VIDEO > உயிரிழந்த தன் தந்தைக்காக கோடிகளை கொட்டி தாஜ்மஹால் மற்றும் ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற வடிவில் நினைவாலயம் கட்டிய மகன் #இலங்கை #VIDEO > உயிரிழந்த தன் தந்தைக்காக கோடிகளை கொட்டி தாஜ்மஹால் மற்றும்  ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற வடிவில் நினைவாலயம் கட்டிய மகன் Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

கண்டி - வத்தேகம பிரதேச 16 வயது சிறுமியை கொழும்புக்கு வேலைக்கு வரவழைத்து தகாத தொழில் ஈடுபடுத்தியமை - பெண் உட்பட மூவர் கைது



 கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது யுவதிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகாத தொழிலை நடத்தும் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குறித்த யுவதியை வேலைக்கு அழைத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு நபர்களாலும் யுவதி தகாத வகையில் நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலையை செய்ய குறித்த யுவதி வந்துள்ளார்.


அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தன்னிடம் சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக யுவதியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் இரகசிய காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கண்டி - வத்தேகம பிரதேச 16 வயது சிறுமியை கொழும்புக்கு வேலைக்கு வரவழைத்து தகாத தொழில் ஈடுபடுத்தியமை - பெண் உட்பட மூவர் கைது கண்டி - வத்தேகம பிரதேச 16 வயது சிறுமியை கொழும்புக்கு வேலைக்கு வரவழைத்து  தகாத தொழில் ஈடுபடுத்தியமை - பெண் உட்பட மூவர் கைது Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதாயின், சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என ஜனாதிபதியிடம் பசில் தெரிவிப்பு.



 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.


இதன்போது கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மே தினத்தை அடுத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.


அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் அது தொடர்பில் சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.


அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட தரப்பினரை மீண்டும் உள்வாங்குவதற்கு பிரதமரின் தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தமது தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதாயின், சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என ஜனாதிபதியிடம் பசில் தெரிவிப்பு. ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க  போட்டியிடுவதாயின், சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என  ஜனாதிபதியிடம் பசில் தெரிவிப்பு. Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு.



பாறுக் ஷிஹான்
விவாகரத்து சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக
5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான புத்தளம் காதி நீதிமன்ற நீதிபதியை மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு. Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் ரூபா பேரம் பேசிய மைத்திரிபால சிறிசேன



(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார்.


செவ்வாய்கிழமை (23) விவசாய அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்வாறு குற்றஞ்சுமத்திய அவர் மேலும் தெரிவிககையில்,

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சட்ட பூர்வமான பதில் தவிசாளராவார். அவருக்கான நியமனம் வழங்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. அவரது நியமனத்துக்கு எதிராக எவ்வித ஆட்சேபனைகளும் வெளியிடப்படவில்லை. எந்த தரப்பும் நீதிமன்றத்துக்கும் செல்லவில்லை.


கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நிறைவேற்றுக்குழு கூட்டப்பட்டது.

எமக்கு அழைப்பு வரும் போது செல்லவதற்கான நேரம் கூட இல்லை. அத்தோடு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செயலாளருக்கும் அந்த தடையுத்தரவு பொறுந்தும் என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்றுக்குழுவை கூட்ட முடியாது.


குண்டர்கள் கூட்டத்தைக் கூட்டி இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு சட்டத்துக்கு முரணானதாகும்.

அத்தோடு அதில் பங்கேற்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிகாரம் இல்லை. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலேயே அவர் செயற்பட்டிருக்கின்றார்.

பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்பட்டுள்ளமைக்கு எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம்.


முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களே இதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.

முன்னாள் அமைச்சர் திலங்க சுமதிபால ஆட்சேபனையை வெளிப்படுத்திய போது அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் போடுகின்றார். தற்போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நாட்டிலுள்ள பிரபல வர்த்தகரொருவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துள்ளார்.

அவரிடம் 100 மில்லியன் ரூபாவைக் கோரியுள்ளார். எனினும் குறித்த வர்த்தகர் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் நாம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவிய போது, அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவர் தனது பாதுகாப்புக்காகவும் பணத்தேவைக்காகவும் சுதந்திர கட்சியை உபயோகின்றார் என்றால் அது எந்தளவு அநீதியாகும்?


சுதந்திர கட்சியிலுள்ள அமைச்சர்கள் சரியானவர்கள் அல்ல.

ஆனால் அரசாங்கத்திலுள்ள சு.க.வின் உறுப்புரிமை கூட இல்லாத அமைச்சர் மாத்திரம் பொறுத்தமானரவா?

இவரது பெயரைப் பரிந்துரைப்பதற்கு பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாசவுக்கு எவ்வளவு கிடைத்தது? என்றார்.
பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் ரூபா பேரம் பேசிய மைத்திரிபால சிறிசேன பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் ரூபா பேரம் பேசிய மைத்திரிபால சிறிசேன Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், போலி ஆவணங்கள், போலி ஸ்டிக்கர்களுடன் போலி கணவன் - மனைவி கைது



மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஒட்டப்பட்ட போலி ஸ்டிக்கர்கள் மற்றும் போலி ஆவணங்களுடன் பதுளையில் 43 வயதான ஆண் சந்தேக நபர் ஒருவரும் 22 வயதுடைய பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாக பதுளை பொலிஸ் சிறப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.



கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் அகரபத்தனை மற்றும் புடலுஓயா பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், ஆனால் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் நான்கு பிரதேசங்கள் முகவரிகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



பதுளை, கனுபலெல்ல, தலதாஎல வீதியில் இருவரும் கணவன் மனைவி போல் போலியாக நடித்து வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அங்கிருந்து இந்த போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்களை பயன்படுத்தி போலியான ஆவணங்களை வழங்கி போலியான வியாபாரம் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், போலி ஆவணங்கள், போலி ஸ்டிக்கர்களுடன் போலி கணவன் - மனைவி கைது மோட்டார் வாகன திணைக்களத்தின் போலி முத்திரைகள், போலி ஆவணங்கள், போலி ஸ்டிக்கர்களுடன் போலி கணவன் - மனைவி கைது Reviewed by Madawala News on April 24, 2024 Rating: 5

ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை பெண் ரொசன்னாவை உலகின் 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது Times சஞ்சிகை



உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண் ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார்.

உலகப்புகழ்பெற்ற த டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் இவர் தெரிவாகியுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்ணாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.



இவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் த டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது

அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த
தெரிவின் பின்னர் டைம்ஸ் சஞ்சிகை ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டுள்ளது
ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை பெண் ரொசன்னாவை உலகின் 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது Times சஞ்சிகை ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் இலங்கை பெண் ரொசன்னாவை உலகின் 100 சக்தி வாய்ந்த நபர்களில் ஒருவராக தேர்ந்தெடுத்தது Times சஞ்சிகை Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் #மருதமுனையில் சம்பவம்



பாறுக் ஷிஹான்
நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பெரிய நீலாவணை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


அண்மையில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் கைதான சந்தேக நபர் ஒருவரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.


இதன் போது ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றிய 39 வயத மதிக்க தக்க சந்தேக நபர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.


அத்துடன் குறித்த சந்தே நபர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில்   பொலிசார்   விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் #மருதமுனையில் சம்பவம் போதைப்பொருட்களுடன் கைதான கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் #மருதமுனையில் சம்பவம் Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

ஈரான் ஜனாதிபதியை வரவேற்று, தலைநகர் கொழும்பின் பல பிரதேசங்களிலும் வரவேற்பு பதாதைகள்.



ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் தலைநகர் கொழும்பில் வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை திறந்துவைக்கப்பதற்காக ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு ஒரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.


514 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் ஈரான் அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் 2011 ஆம் ஆண்டு உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இன்று பாகிஸ்தானுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாகிஸ்தான் விஜயத்தை நிறைவு செய்து, நாளை மறுதினம் நாட்டுக்கு வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்நிலையில் அவரை வரவேற்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சார்பில் கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஐ. ஏ. கலீலுர் ரஹ்மான், எம்.காதர், எம்.முசம்மில் போன்றோர்களினால் இந்த வரவேற்பு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது

நூருல் ஹுதா உமர்


ஈரான் ஜனாதிபதியை வரவேற்று, தலைநகர் கொழும்பின் பல பிரதேசங்களிலும் வரவேற்பு பதாதைகள். ஈரான் ஜனாதிபதியை வரவேற்று,  தலைநகர் கொழும்பின் பல பிரதேசங்களிலும் வரவேற்பு பதாதைகள். Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி கடக்க முயன்ற 78 வயது முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு



இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார்.


இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.


இந்நிலையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகுமூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.


அங்கிருந்து நேற்று காலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்டம் முறையில் நீந்த தொடங்கினர்.


அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.


இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.


இதனையடுத்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து சென்று பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.


உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர். கோபால் ராவ் உயிரிழந்த தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி கடக்க முயன்ற 78 வயது முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு நீந்தி கடக்க முயன்ற 78 வயது முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

இன்று உலக புத்தக தினம்



புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்று (23) கொண்டாடப் படுகிறது.

இந்த ஆண்டுக்கான சர்வதேச புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினத்தின் கருப்பொருள் 'உங்கள் வழியைப் படியுங்கள்' என்பதாகும்.



வாசிப்பு ஆர்வத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எல்லா வயதினரையும் புத்தகங்களுடன் இணைப்பதற்கான வழிகளைக் கண்டறிய ஊக்குவிக்கிறது.



இந்த நாளில், புத்தகங்களின் அவசியம், பல்வேறு பின்னணியில் உள்ள மக்களை ஊக்குவிக்கும் மற்றும் கல்வி கற்பிக்கும் திறன் ஆகியவற்றை முன்னிலைப்படுத்த உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இன்று உலக புத்தக தினம்  இன்று உலக புத்தக தினம் Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

தனியார் நிதி நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இருவர், அதே நிறுவனத்தை உடைத்து சுமார் 6 கோடி பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சிக்கிய சம்பவம் பதிவு #இலங்கை



கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும் சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் நிதி நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இருவர், அதே நிறுவனத்தை உடைத்து சுமார் 6 கோடி பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சிக்கிய சம்பவம் பதிவு #இலங்கை தனியார் நிதி நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் இருவர், அதே நிறுவனத்தை உடைத்து சுமார் 6 கோடி பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சிக்கிய சம்பவம் பதிவு #இலங்கை Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

இன்று அதிகாலை, பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் உயிரிழந்த இருவர் பற்றிய முழு விபரம் வெளியிடப்பட்டது.



இன்று (23) அதிகாலை, மீகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேருகெட்டிய சந்திக்கு அருகில், வீதித் தடைக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் ஆணையை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

தொம்பேயில் இருந்து வந்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு சமிக்ஞை கொடுத்த போது, பொலிஸாரின் ஆணையை மீறி முன்னே ஓட்டிச் சென்ற அவர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களை நோக்கிச் சுட்டுவிட்டு மொரகஹஹேன நோக்கி பயணித்துள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக சுற்றுவட்டார பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தி கிடைத்ததும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் கடமையாற்றிய மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தப்பிச் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

இந்த சந்தர்ப்பத்தில், ​​பொலிஸ் ஆணையை மீறி முச்சக்கரவண்டி பயணித்துள்ள நிலையில், பொலிஸார் துரத்திச் சென்ற போது வீதியை விட்டு விலகி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்தொடர்ந்து வந்த ஜீப் வண்டி, முச்சக்கரவண்டிக்கு அருகில் வந்து நிறுத்தப்பட்ட போது முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் ஜீப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர் 36 வயதுடைய மத்தேகொட பகுதியைச் சேர்ந்த இமேஷ் தனுஷ்க தர்ஷன என்பதுடன், இலங்கைப் பொலிஸாரின் முன்னைய குற்றப் பதிவுகளை ஆய்வு செய்த போது, ​​2010 ஆம் ஆண்டு முதல் பல சந்தர்ப்பங்களில் வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு கஹதுடுவ மற்றும் மத்தேகொட பொலிஸ் பிரிவுகளில் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை திருடியுள்ளமையும் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த நபர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என்றும், இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்றும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

மிரிஹான, மத்தேகொட மற்றும் மொரகஹஹேன பொலிஸ் பிரிவுகளில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மற்றைய சந்தேக நபர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் ஆவார்.

அவர் மத்தேகொட பண்டாரநாயக்கபுர பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வரும் சுராஜ் பிரபோத ஆதிஹெட்டி என்ற நபர் என தெரியவந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முதல் பிலியந்தலை, தலங்கம, தனமல்வில ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஐஸ் மற்றும் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்கு துப்பாக்கிச் சூடு நடத்த வந்த இருவரில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவரும் இவரே எனத் தகவல் கிடைத்துள்ளது.

இவர் அது தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு கடந்த மார்ச் 18 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் 26.12.2002 அன்று கஹதுடுவ பொலிஸாரால் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பயன்படுத்திய கைத்துப்பாக்கி முச்சக்கரவண்டிக்கு அருகில் கிடந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை, பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் உயிரிழந்த இருவர் பற்றிய முழு விபரம் வெளியிடப்பட்டது. இன்று அதிகாலை, பொலிஸாரின் ஆணையை மீறி சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் உயிரிழந்த இருவர் பற்றிய முழு விபரம் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

மே மாதம் 7, 9, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சஜித்துடன் விவாதம் பண்ண முடியும் என அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு



ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிற்கு தேசிய மக்கள் சக்தி கடிதமொன்றை அனுப்பியது.

அதற்கமைய மே மாதம் 7, 9, 13 ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

திகதியை தெரிவு செய்ததன் பின்னர் நேரம், விவாதத்திற்கான காலப்பகுதி, இடம் மற்றும் விவாதம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி என்பன தொடர்பில் தீர்மானிக்க முடியும் என தேசிய மக்கள் சக்தி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 7, 9, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சஜித்துடன் விவாதம் பண்ண முடியும் என அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு மே மாதம் 7, 9, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் சஜித்துடன் விவாதம் பண்ண முடியும் என அனுர குமார திசாநாயக்க அறிவிப்பு Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத், மதீனா விபத்தில் மரணம்



இலங்கை மாணவன் மதீனா விபத்தில் மரணம்.

சவுதி அரேபியா மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் இலங்கை பேருவளையை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாணவர் ஒருவர் நேற்று மாலை மதீனா நகரில் இடம் பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இருபது வயதுடைய ஸீஷான் அரபாத் என்ற மாணவரே உயிரிழந்துள்ளார். 

இவர் இலங்கையின் பேருவளை பிரதேசத்தை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டவர்.

இவருடைய ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (அவரின் பெற்றோர் வருகை தந்த பின்னர்) மதீனா புனித ஜன்னத்துல் பக்கி மையவாடியில்  நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.
இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத், மதீனா விபத்தில் மரணம் இலங்கை மாணவன் ஸீஷான் அரபாத்,  மதீனா விபத்தில் மரணம் Reviewed by Madawala News on April 23, 2024 Rating: 5

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு



2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அந்த காலப்பகுதியில் நாட்டின் பிரதான வருமானம் ஈட்டும் இலங்கை சுங்க, கலால் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களங்கள் 834 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது எதிர்பார்க்கப்பட்ட வருமானமான 787 பில்லியன் ரூபாவை விட 6% அதிகம் என அமைச்சர் குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட 381 பில்லியன் ரூபாவை விட 13% அதிகரிப்புடன் 430 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

சுங்கத் திணைக்களம் 353 பில்லியன் ரூபா இலக்கை எட்டியுள்ளதாகவும், கலால் திணைக்களம் 96% வருமானத்துடன் 51 பில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் 4,106 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்க்கிறது, அதில் 93% வரி வருமானம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 அரசாங்க வருமானம் குறைந்தமையே பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் எனத் தெரிவித்த சியாம்பலாபிட்டிய, முதல் காலாண்டில் இந்த இலக்குகளை தாண்டியமை மற்றும் வருமான முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 2024 ஆம் ஆண்டு வருவாய் இலக்குகளை எட்ட முடியும் ஒரு ஆண்டாக அமையும் என்றும் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவிப்பு Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5

ஈரான் ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வருவதாக அறிவிப்பு



ஈரான் ஜனாதிபதி கலாநிதி செயிட் இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்
ஈரான் ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வருவதாக அறிவிப்பு ஈரான் ஜனாதிபதி எதிர்வரும் புதன்கிழமை (24) இலங்கை வருவதாக அறிவிப்பு Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5

எச்சரிக்கை ⚠️ பொலிஸார் போன்ற உடையில் வந்து, யுக்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம் எனக்கூறி வீடொன்றில் புகுந்து 90 இலட்சத்திற்கும் அதிகமான பணம், பொருள் கொள்ளையடிப்பு



நுரைச்சோலை நாவக்காடு பகுதியில் இன்று (22) பொலிஸ் வேடமணிந்த குழுவொன்று வீடொன்றிற்குள் புகுந்து தங்க ஆபரணங்கள், கையடக்கதொலைபேசி, பணம் உள்ளிட்ட 90 இலட்சத்திற்கும் அதிகமான சொத்துக்களை கொள்ளையடித்து பின்னர் அங்கிருந்தவர்களை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நாவக்காடு பகுதியில் புகையிலை மற்றும் மரக்கறி உற்பத்தியாளரின் வீடு இவ்வாறு கொள்ளையிடப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கொள்ளைச் சம்பவத்தின் போது இந்த வீட்டின் வர்த்தகர், அவரது மனைவி, தாய் மற்றும் இந்த வர்த்தகரின் மூன்று மகள்கள் வீட்டில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

போலீஸ் சீருடைக்கு நிகரான சீருடையில் வந்துள்ள கொள்ளை கும்பல், யுக்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்று கூறி, வீட்டினுள் வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்

குறித்த சந்தேக நபர்களை இதுவரை பொலிஸாரால் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது
எச்சரிக்கை ⚠️ பொலிஸார் போன்ற உடையில் வந்து, யுக்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம் எனக்கூறி வீடொன்றில் புகுந்து 90 இலட்சத்திற்கும் அதிகமான பணம், பொருள் கொள்ளையடிப்பு எச்சரிக்கை ⚠️ பொலிஸார் போன்ற உடையில் வந்து, யுக்திய நடவடிக்கை மேற்கொள்கிறோம் எனக்கூறி வீடொன்றில் புகுந்து 90 இலட்சத்திற்கும் அதிகமான பணம், பொருள் கொள்ளையடிப்பு Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5

நேற்றைய கார் பந்தய கோர விபத்தில் பலியான 7 பேரின் விபரம் வெளியானது



நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) தியத்தலாவையில் இடம்பெற்ற “Fox Hill Super Cross 2024” பந்தய நிகழ்வில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 23 பேர் காயமடைந்துள்ளனர்.


உயிரிழந்தவர்களில் கொடி மார்ஷல்களாக ( racing event officials serving as flag marshals) பணியாற்றிய நான்கு பந்தய நிகழ்வு அதிகாரிகளும் பார்வையாளர்களாக இருந்த பொதுமக்களும் அடங்குவர்.
அவர்களின் விபரம் 👇
*Shivakumar Dhanushika, 8 year old from வெலிமடா

*Chamath Niroshan, 19 year old from Seeduwa

*Ashan Heenatigala, 20 year old from Akuressa

*Rasika Abeynayake 32 year old from Avissawella,
Army Soldier on vacation

*Muththusamy Udayakumar, 55 year old from Welimada

*Aruna Upaligamage, 62 year old from Matara

*Ganesh Kamalanath, 60 year old from Matara
நேற்றைய கார் பந்தய கோர விபத்தில் பலியான 7 பேரின் விபரம் வெளியானது நேற்றைய கார் பந்தய கோர விபத்தில் பலியான 7 பேரின் விபரம் வெளியானது Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5

ஈரானிய சிறுவர்களின் விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­ கொப்­டர்' விளையாட்டை போல் தான் இஸ்ரேல் எம்மீது நடத்திய தாக்குதல் இருந்தது என ஈரான் தெரிவிப்பு.­



ஈரான்மீது இஸ்ரேல் நடத்­தி­ய­தாகக் கூறப்­படும் பதி­ல­டி­யா­னது 'ஒரு தாக்­கு­தலே அல்ல' என ஈரான் விமர்­சித்­துள்­ளது. அது சிறு­வர்­களின் விளை­யாட்டைப் போன்­றது என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் கூறி­யுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடை­யி­லான போர் அபாய அச்­சத்தை தணிப்­ப­தாக இக்­க­ருத்­துகள் உள்ளன.

சிரி­யா­வி­லுள்ள ஈரா­னிய துணைத்­தூ­த­ர­கத்தின் மீது இஸ்ரேல் கடந்த முதலாம் திகதி நடத்­திய தாக்­கு­தலில் ஈரா­னிய இரா­ணுவ அதி­கா­ரிகள் உட்­பட பலர் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக இஸ்ரேல் மீது கடந்த 13 மற்றும் 14ஆம் திக­தி­களில் சுமார் 300 ஆளில்லா விமா­னங்கள்இ ஏவு­க­ணை­களை ஈரான் ஏவி­யது. இவற்றில் 99 சத­வீ­த­மா­னவை சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தா­கவும் இஸ்­ரே­லுக்கு சிறிய பாதிப்­பு­களே ஏற்­பட்­ட­தா­கவும் இஸ்ரேல் தெரி­வித்­தி­ருந்­தது.

எனினும் இத்­தாக்­கு­த­லுக்கு பதி­ல­டி­யாக ஈரான் மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை (19) அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா தெரி­வித்­தது. அன்­றைய தினம் ஈரானின் இஸ்­பஹான் நகரில் வெடிப்புச் சத்­தங்கள் கேட்­ட­தாக செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது.

3 சிறிய ஆளில்லா விமா­னங்கள் சுட்­டு­வீழ்த்­தப்­பட்­ட­தாக ஈரா­னிய அதி­காரி ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

ஈரான்மீது இஸ்ரேல் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை தாக்­குதல் நடத்­தி­ய­தாக அமெ­ரிக்கா கூறிய போதிலும் அத்­தாக்­கு­தலை தான் நடத்­தி­ய­தாக இஸ்ரேல் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­க­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­ந­ட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட ஆயுதம் தொடர்­பிலும் முரண்­பா­டான தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அது ஏவு­கணைத் தாக்­­குதல் என அமெ­ரிக்கா தெர­ிவித்­தி­ருந்­தது. எனினும் ஆளில்லா விமா­னங்­களை (ட்ரோன்­கள்) சுட்­டு­வீழ்த்­தி­ய­தாக ஈரான் கூறு­கி­றது.

இந்­நி­லையில் இது ஒரு தாக்­கு­தலே அல்ல என ஈரா­னிய வெளி­வி­வ­கார அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்­துல்­லா­ஹியன் கூறி­யுள்ளார்.

பதில் தாக்­குதல் திட்­ட­மில்லை

அமெ­ரிக்­காவின் என்.பி.சி. அலை­வ­ரி­சைக்கு வெள்­ளிக்­கி­ழமை அளித்த செவ்­வி­யொன்றில் இது தொடர்­பாக அவர் கூறு­கையில்,

' நடந்­தது தாக்­குதல் அல்ல. அது ஈரானில் எமது சிறு­வர்கள் பயன்­ப­டுத்தும் விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­-கொப்­டர்'­க­ளுக்கு இடை­யி­லான மோதலைப் போன்­றது. அவை ஆளில்லா விமா­னங்கள் அல்ல' என வெள்­ளிக்­கி­ழமை அவர் கூறி­யுள்ளார்.

ஐ.நா. பாது­காப்புச் சபை நிகழ்­வொன்றில் பங்­கு­பற்­று­வ­தற்­காக நியூ யோர்க்­குக்கு சென்­றி­ருந்த நிலையில் அமைச்சர் அப்­துல்­லா­ஹியன் இந்த செவ்­வியை அளித்­துள்ளார்.

இஸ்ரேல் குறிப்­பி­டத்­தக்­க­வொரு தாக்­கு­தலை நடத்­தினால் தவிர, இஸ்ரேல்மீது பதில் தாக்­குதல் நடத்தும் திட்டம் ஈரா­னிடம் இல்லை எனவும் அவர் கூறி­யுள்ளார்.

ஆனால்இ ஈரான்மீது இஸ்ரேல் தாக்­குதல் நடத்­தினால் ஈரானின் பதி­லடி துரி­த­மா­கவும் கடு­மை­யா­கவும் இருக்கும் என அவர் கூறினார்.

அதே­வேளை இஸ்ரேல்மீது ஈரான் நடத்­திய ஏவு­கணை, ஆளில்லா விமானத் தாக்­குதல் ஓர் எச்­ச­ரிக்கை நோக்­க­மு­டை­யது எனவும் அமைச்சர் அப்துல்லாஹின் கூறினார்.

'எம்மால் (இஸ்ரேலிய நகரங்களான) டெல் அவிவ் அல்லது ஹைஃபாவை தாக்கியிருக்க முடியும். இஸ்ரேலின் அனைத்து பொருளாதார துறைமுகங்களையும் தாக்கியிருக்கலாம்.

'ஆனால், எமது சிவப்புக் கோடுகள் பொது­மக்கள் ஆவர் இராணுவ நோக்கம் மாத்திரமே எம்மிடமிருந்தது' என அவர் கூறினார்.
ஈரானிய சிறுவர்களின் விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­ கொப்­டர்' விளையாட்டை போல் தான் இஸ்ரேல் எம்மீது நடத்திய தாக்குதல் இருந்தது என ஈரான் தெரிவிப்பு.­ ஈரானிய சிறுவர்களின் விளை­யாட்டுப் பொரு­ளான 'குவாட்-­ கொப்­டர்' விளையாட்டை போல் தான் இஸ்ரேல் எம்மீது நடத்திய தாக்குதல் இருந்தது என ஈரான் தெரிவிப்பு.­ Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5

காஸா மக்களுக்காக சுமார் 31 இலட்சம் ரூபா உதவித் தொகையை கையளித்தது கல்முனை கல்வி வலயம்.



பாறுக் ஷிஹான்
கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காஸா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா இன்று கையளிக்கப்பட்டுள்ளது

வலயக் கல்விப் பணிப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல் நஜீமிடம் கணக்காளர் வை.ஹபீபுல்லாஹ் குறித்த காசோலையினை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஜாபிர் உட்பட கல்வி வலய உயரதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் வலயக் கல்விப்பணிப்பாளர் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வின் போதே இக்காசோலை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது

வலயக் கல்விப் பணிப்பாளரது வழிகாட்டலுக்கமைய கணக்காளரின் நெறிப்படுத்தலில் வலயக் கல்வி அலுவலக கல்விசார், கல்விசார ஊழியர்கள் மற்றும் அதிபர்களின் நிதிப்பங்களிப்புடன் இத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் இடம்பெறும் இப்தார் நிகழ்விற்கான செலவீனத்தை மட்டுப்படுத்தியே இத் தொகையானது ஜானாதிபதியின் ஆலோசனைக்கமைய திரட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

காஸா மக்களுக்காக சுமார் 31 இலட்சம் ரூபா உதவித் தொகையை கையளித்தது கல்முனை கல்வி வலயம். காஸா மக்களுக்காக சுமார் 31 இலட்சம் ரூபா உதவித் தொகையை கையளித்தது கல்முனை கல்வி வலயம். Reviewed by Madawala News on April 22, 2024 Rating: 5
Powered by Blogger.